159
சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடு செல்வதற்காக, தங்கியிருந்த 12 பேரை, காவல்துறை விசேட அதிரடிப் படையினர் நேற்றையதினம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸமகாராம, பன்னகமுவ மற்றும் அளுத்கொட பிரதேசங்களில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைத்தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை விசேட அதிரடிப் படையினர் திஸ்ஸமகாராம காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் இன்று அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love