தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையகம் மீண்டும் நேற்றையதினம் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையகம் அமைக்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வஜசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் விசாரணை இறுதிக்கட்டத்தினை எட்டியியுள்ளது.
இந்தநிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் மட்டும்தான் விசாரிக்கப்பட வேண்டியுள்ள நிலையில் பன்னீர்செல்வத்துக்கு அழைப்பாரைண அனுப்பப்பட்டும் அரசுப் பணிகள் இருப்பதாகக் கூறி அவர் இதுவரை முன்னிலையாகவில்லை.
மேலும் ஆணையகத்தை மேலும் 10 வாரங்களுக்கு நீட்டிக்கக் கோரி தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியிருந்தநிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெப்ரவரி 19ஆம் திகதி ஆணையத்தில் முன்னிலையாக வேண்டும் என நேற்று மீண்டும் அழைப்பாணை ; அனுப்பப்பட்டுள்ளது.