புத்தளம்- அருவக்காடு பகுதியில், கொழும்பு குப்பைகளைக் கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதனால் புத்தளம் நகரின் இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம், கரைத்தீவு, தில்லையடி, கற்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் அனைத்து வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தை என்பன மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் அருவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த புதன்கிழமை முதல் இன்று வரையான மூன்று தினங்கள் புத்தளத்தில் கறுப்பு தினமாக பிரகடனப்படுத்துவதாக புத்தளம் பௌத்த மத்திய நிலையம், இந்து மகா சபை, கிறிஸ்தவ சபை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளை, புத்தளம் பெரிய பள்ளி ஆகியன இணைந்து அறிவிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.