கௌதம் மேனன் இயக்கும் ஜெயலலிதா குறித்த வாழ்க்கைத் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க, சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கவுள்ளார்.
ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டி போடுகின்றனர். இவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் பல்வேறு பெயர்களில் திரைப்படமாக இயக்குகின்றனர்.
இந்த நிலையில், கௌதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகின்றார். இத் தொடர்பின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஜெயலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். சசிகலாவாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்படடது. சர்ச்சையான வேடம் என்பதால் குறித்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகைகள் தயக்கம் தெரிவித்தனர். சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தில்லு முல்லு படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த விஜி தற்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வருகின்றார். இதில் வம்சி கிருஷ்ணா சோபன் பாபுவாகவும், இந்திரஜித் எம்.ஜி.ஆராகவும் நடிக்கின்றனர். இந்த படம் விரைவில் இணையதளத்தில் தொடராக வெளியாகவுள்ளது.