காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல்துறைப் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவரவாதி நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் படையினர் அனைவரும் தீவிர கண்காணிப்பு நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் கும்பமேளாவில் புனித நீராட வரும் பக்தர்கள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கும்பமேளா நடைபெறும் பிரதான பகுதிகள் அனைத்திலும் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பக்தர்களின் பாதுகாப்புக்காக அதிநவீன தொழில் நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.