பிரித்தானியாவின் சவூதி அரேபியாவிற்கான ஆயுத விநியோகம் ஏமனில் ஏராளமான பொதுமக்களின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளதனால் அவசர நடவடிக்கையாக சவூதிக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்துமாறு பிரதமர் தெரேசா மேயிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதிக்கு 4.7 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை விநியோகிப்பதற்கு பிரித்தானியா உரிமம் பெற்றுள்ள நிலையில் அதிகரித்துவரும் மனிதாபிமான பேரழிவுகள் காரணமாக ஆயுத விநியோகத்திற்கு தடை விதிக்குமாறு பிரதமர் மே அழுத்தங்களை எதிர்நோக்கி வருகிறார்.
ஏமனில் ஹவுத்திப் போராளிகள் மீது சவூதி அரேபிய கூட்டுப் படை கடந்த 2015ஆம் ஆண்டு முதல் விமானத் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதனால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் இலட்சக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
00