161
தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், அடுத்து நடிக்கவுள்ள திரைப்படத்தை இயக்குநர் எழில் இயக்கவுள்ளார். ரமேஷ்.பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ் சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், சசி இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரித்து வருகின்றது. அதனையடுத்து, எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தையும் அதே நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
இந்த படத்தின் ஆரம்ப விழா எளிமையாக ஆலயம் ஒன்றில் நடைபெற்றது. நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. அத்துடன் இப் படத்தின் படப்பிடிப்புக்கள் எதிர்வரும் மார்ச்சில் ஆரம்பிக்கப்பவுடள்ளது.
Spread the love