அமெரிக்காவின் சிகாகோ அருகே அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளது 6 காவல்துறையினர் காணமடைந்துள்ளனர்.
குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களுக்கான வால்வுகள் தயாரிக்கும் வட அமெரிக்காவின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமான இந்த நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு கட்டிடம் ஒன்றில் நேற்று முன்தினம் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
அங்கு பணியாற்றிக்கொண்டு இருந்த 45 வயதான கரி மார்ட்டின் என்பவரே இவ்வாறு சக ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளார். 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளநிலையில் சம்பவ இடத்து வந்த காவல்துறையினர் ஹென்றி பிராட்டை சரணடையுமாறு தெரிவித்த போது அவர் காவல்துறையினரை நோக்கியும் சுட்டதனால் 6 காவல்துறையினர் காயமடைந்த நிலையில் துப்பாக்கிததாரி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவில் இந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவமாக இது கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது