170
வவுனியா பட்டகாடு பகுதியில் பட்டப் பகலில் வீடு உடைக்கப்பட்டு, பணம் நகை என்பன திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டகாடு பகுதியில் குடும்பம் ஒன்று தமது வேலைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காக வெளியில் சென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் கதவினை உடைத்து, தாலிக்கொடி, 20ஆயிரம் ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளது.
வவுனியா காவல்துறையினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love