இதுவரை காலமும் யாழ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயற்பட்டு வந்த வவுனியா வளாகத்தினை வன்னி பெருநிலப்பரப்பில் தனியான ஒரு பல்கலைக்கழகமாக தரமுயர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்ள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற யாழ்; பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்துக்கான தொழில்நுட்பப் பிரிவின் புதிய கட்டடத்தையும், அதனுடன் இணைந்த கணினி ஆய்வு கூடத்தையும் திறந்து வைத்து, உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை தயாரிக்குமாறு, தனது அமைச்சின் செயலாளருக்கும் மேலதிக செயலாளருக்கும் பணிப்புரை விடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியிலான பல்கலைக்கழகக் கணிப்பீட்டில், எமது நாட்டுப் பல்கலைக்கழகங்கள் குறைந்த தரத்திலுள்ளதனால் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்குவதில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாகவும் எனவே, இவற்றை நிவர்த்தி செய்வதற்கு, பல்கலைக்கழகங்களின் தர நிர்ணயத்துக்கான புதிய பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.