13 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மக்ராத்திற்குப் பின்னர் டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் தற்போது பற் கமின்ஸ் (Pat Cummins ) முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையினை வெளியிட்டுள்ள நிலையில் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென்னாபிரிக்க வீரர் ரபாடாவை பின்னுக்குத்தள்ளி அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பற் கமின்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
2006-ம் ஆண்டு ஐசிசி பந்து வீச்சு தரவரிசையில் மெக்ராத் முதல் இடம் பிடித்திருந்ததன் பின் தற்போது பற் கமின்ஸ் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை துடுப்பாட்டக்காரர்களின் தரவரிசையில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி 992 புள்ளிகள் பெற்று முதலித்திலும் நியூசிலாந்து அணித் தலைவர் கான் வில்லியம்சன் 2-வது இடத்திலும், புஜாரா 3-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.