File Photo
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை எதிவரும் 25-02-2019 அன்று கிளிநொச்சியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மதத்தலைவர்கள், அரசியற்கட்சிகளின் பிரதிநிதிகள் நிறுவனம் சார்ந்த பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்றுகூடி இலங்கை அரசுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் மற்றும் சர்வதேச சமூகத்திடமும், தமது உறவுகளுக்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரியே இக் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து மாபெரும் பேரணி ஏ – 9 வீதி ஊடாக நகர்ந்து டிப்போசந்தியை அடைந்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளிடம் மகஐர் கையளிக்கப்படும் எனவும் இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வடபகுதியில் பூரண கதவடைப்புடன் கூடிய கர்த்தலை அனுஷ்டிப்பதற்கு முழுமையான உணர்வுபூர்வமான பங்களிப்பினை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் கோரியுள்ளது.