குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை புதன் கிழமை (20) மன்னார் நீதிமன்றத்தில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை கடந்த 16 ஆம் திகதி அதிகாலை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து ஆய்வறிக்கை பெற்றுக் கொண்டுள்ளார்.
மனித எச்சங்களின் 6 மாதிரிகள் மீதான கார்பன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு ஆவற்றில் 5 மாதிரிகளின் அறிக்கைகள் கடந்த சனிக்கிழமை (16) பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதை உறுதி படுத்திய சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ குறித்த அறிக்கையில் என்ன விடையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது? என்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
எனினும் குறித்த கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை 146 நாட்;கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது 323 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றில் 314 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 28 சிறுவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது