158
யாழ்.கீரிமலை கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது, அதனை அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளி கண்டு காவற்துறையினருக்கு வழங்கிய தகவல் அடிப்படையில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சடலம் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருடைய சடலம் எனவும், அரை காற்சட்டையுடன் காணப்படுவதாவும், சடலம் கடலில் மிதந்து வந்தா? அல்லது நீராட சென்று உயிரிழந்தவருடையதா? என்ற கோணத்தில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Spread the love