அக்கரப்பத்தனை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் நேற்று 19.02.2019 )மாலை 4 மணியளவில் காணாமல் போன 2 வயதுடைய யசிப் விதார்த் என்ற குழந்தை இன்று காலை 9 மணியளவில் சுமார் 18 மணித்தியாலயங்களுக்கு பின்னர் அப்பகுதி தேயிலை மலை பகுதியிலிருந்து பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை தனது வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் பொழுது, வெளியே சென்ற குழந்தை திடீரென காணாமல் போயிருந்தார்.
சிறுவனை மீட்கும் பணியில் காவல்துறையினரும்;, பிரதேசவாசிகளும், தலவாக்கலை விசேட அதிரடி படையினரும் ஈடுப்பட்டிருந்த நிலையில் வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள தேயிலை மலை பாதையில் குழந்p9தை மீட்கப்பட்டுள்ளார்.
தேயிலை மலை பாதையில் குறித்த நபர் ஒருவர் சிறுவனை விட்டுச் செல்வதை கண்ட பிரதேசவாசிகள் குறித்த நபரை துரத்தி பிடிக்க முற்பட்ட போது, நபர் தப்பிச் சென்றுள்ளார். எனினும் மேற்படி சந்தேகிக்கும் நபரை தேடும் பணியில் பிரதேசவாசிகளும், பொலிஸாரும் ஈடுப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவனை அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை காவல்துறையினர் மற்றும் நுவரெலியா காவல்துறை அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)