தங்கள் கட்சியில் சேர்ந்தால் மட்டுமே நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு அளிப்போம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. பெங்களூரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு பின் நடிகர் பிரகாஷ்ராஜ் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதுடன் இந்த படுகொலைக்கு பா.ஜனதா தான் காரணம் எனவும் குற்றம் சுமத்தி வந்தார்.
பிரகாஷ் ராஜின் அரசியல் ஆர்வம் காரணமாக அரசியல் கட்சிகள் அவரை தங்கள் கட்சிகளுக்கு வருமாறு அழைப்பு அழைப்பு விடுத்த போதிலும் அழைப்புகளை நிராகரித்த அவர் சுயேட்சையாக பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து பிரசாரத்தையும் ஆரம்பித்திருந்தார்.
அத்துடன் சுயேட்சையாக போட்டியிடும் தனக்கு மதசார்பற்ற கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி ஆதரவு வழங்கியுள்ள போதிலும் காங்கிரஸ் அவரது கோரிக்கையை நிராகரித்து ஆதரவு வழங்க மறுத்துவிட்டது.