குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஒரு நாடு பொருளாதார ரீதியில் சுதந்திரமடையாவிடின் அரசியல் சுதந்திரத்தினை அடையமுடியாது.வடமாகாணத்திற்கு பொருளாதார சுதந்திரம் தேவை என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் முன்னேடுக்கப்படுகின்ற மக்கள் பணிகள் தொடர்பாக ஊடக சந்திப்பு இன்று கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது, இதன் போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் ,
வடமாகாணத்தில் 25 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கபெறுகின்றது. இதில் சுமார் நான்கு சதவீதமான வருமானத்தினை எமது மாகாணத்திற்கு எடுத்துகொள்ளுகின்றோம். இவ்வாறான நிலையினை உயர்த்த வேண்டிய தேவை காலத்தின் தேவையாக காணப்படுகின்றது எனவே இதற்கு அர்பணிப்புடன் அரச அதிகாரிகள் ஒத்துழைப்புக்களை வழங்க முன்வரவேண்டும் என தெரிவித்தார்.
இதில் 96 வீதமான அபிவிருத்திக்கான நிதிகள் மத்திய அரசாங்கத்தின் இருந்து தான் கிடைக்கின்றன.இதில் 25 பில்லியனில் 15 பில்லினை கல்விக்காக முன்னேடுக்கின்றோம்.அதில் மீளவருகின்ற செலவுக்காக திருப்பி திருப்பி செய்கின்றோம்.இதில் கல்வி வளர்ச்சி,புதிய கட்டிடங்கள், ஆராட்ச்சிக்காக இவ் பெருந்தொகை நிதியினை எடுக்கின்றோம்.
இவற்றில் பாரிய பிரச்சனையாக இருக்கின்றது சுகாதாரமாக இருக்கின்றது. இவற்றில் மேலதிகமாக வடமாகாணத்தில் 05 அமைச்சுகளுக்குரிய காணப்படுகின்றது.வடமாகாணத்தில் விவசாயத்துறைக்கான மூதலீடுகளை செய்யவேண்டும்.புதிய விவசாய முறைகளை கண்டுபிடிக்கவேண்டும்.கல்வியும்,சுகாதாரமும் உழைக்கமுடியாது
விவசாயம் என கூறப்படுகின்றபோது மண் சார்ந்த விவசாயம்,அல்ல தண்ணீர் சார்ந்த விவசாயம் இல்லை விவசாயத்துறையும்,மீனவத்துறையினையும் வேலைவாய்ப்பு எதிர்நோக்கின்ற பட்டதாரிகளோ, குறிப்பிட்ட இரு துறைகளுக்கும் முகம் கொடுக்க முன்வருவதில்லை. இதனை நீங்கள் ஊடகத்துறை சார்ந்தவர்களே இவ்வாறான விடையத்தினை பட்டதாரிகள் சமூகத்திடம்முன்வைக்கவேண்டும்.
உதாரணமாக உல்லாசத்துறை எடுத்து நோக்கின்ற போது பல சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகின்றனர்.புலம்பெயர்ந்தோர்கள்,இங்கு வருகின்றனர். இவர்களை இலக்காக கொண்டு யாழ் உற்பத்தி பொருட்களின் பயன்பாட்டினை வெளிப்படுத்தும் நோக்கில் புகையிரத நிலையத்தில் கண்காட்சி நடத்துவதட்கு திட்மிடப்பட்டுள்ளதாக மேலும் இதன்போது குறிப்பிட்டார்