173
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல் அறிமுக விழா சனிக்கிழமை(23) கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
கல்வி கலாசார அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்விற்கு வடமாகாண முன்னாள் கல்வியமைச்சர் த.குருகுலராசா தலைமை தாங்கவுள்ளார். நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சிறப்பு வருகையாளராக கலந்து கொள்ளவுள்ளார்.
மேற்படி நாவலுக்கான விமர்சன உரையை யாழ்ப்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளரும், எழுத்தாளருமான தி. செல்வமனோகரன், எழுத்தாளர் வெற்றிச் செல்வி ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
Spread the love