காஸ்மீர் புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. புல்வாமா மாவட்டத்தில் அண்மையில் 78 வாகனங்களில் சென்ற கடந்த பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றிருந்ததுடன் உள்ளூரைச் சேர்ந்த 22 வயது ஆதில் அகமதுதர் என்பவரே 350 கிலோ வெடிமருந்து நிரப்பிய காரை ஓட்டிச் சென்று தற்கொலைத் தாக்குலை மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இந்த தாக்குதல் காஷ்மீர் இளைஞர்கள் மூலம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான ரியாஸ் நைகூ வெளியிட்டுள்ள 17 நிமிட குரல் ஒலிப்பதிவு ஒன்றில் “நீங்கள் காஷ்மீரில் இருக்கும்வரை தொடர்ந்தும் அழுகுரல் கேட்டுக்கொண்டேதான் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.