153
போதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் குறித்த பட்டியலை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரை தம்மிடம் வழங்கவில்லை என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். பாராளு ளுமன்ற அமர்வு இன்று காலை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பமானபோதே சபாநாயகர் இதனைர் தெரிவித்துள்ளார். இதேவேளை அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் குறித்த கருத்துக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசிய கட்சியினால் அவைத்தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக ரஞ்சன் ராமநாயக்க நாளை அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love