215
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி ,தர்மபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று(22) காலை மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் மேற்கு 6 யூனிட்டை சேர்ந்த 28 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையான அரசசிங்கம் கௌரியானந்தம் என்பவரே தருமபுரம் 2ஆம் யூனிட் குளத்தடியில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொது மக்களால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்குச் சென்ற தருமபுரம் காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்
Spread the love