151
“நான் சிங்கள பெளத்தனாக பிறந்தமையால், எனது இனத்திற்காக போராடி இப்போது சிறையில் இருக்கிறேன். நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக போராடி ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன்”என ஞானசார தேரர் தெரிவித்ததாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் நேற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சந்தித்திருந்த வேளை அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Spread the love