குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில் 121 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (22.02.2016 ) முற்பகல் 10.00 மணியளவில் வன்னேரிக்குளம் பொது மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் சி.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விவசாயிகளுக்கான அறிவித்தல்கள், கருத்துக்களை கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் . மேலதிக மாவட்டச் செயலாளர் சி. சத்தியசீலன் பயிர்ச்செய்கை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர், கிளிநொச்சி நீர்ப்பாசனப் பொறியியலாளர் உட்பட துறைசார்ந்த அதிகாரிகளினால் விவசாயிகளுக்கு விளக்;கம் அளிக்கப்பட்டது
வன்னேரிக்குளத்தின் நீர் மட்டம் 08 அடி 03 அங்குலமாகக் காணப்படும் நிலையில் வன்னேரிக்குளத்தின் பின்வழியாக நீர் வெளியேறிவரும் நிலையில் அதனைத் தடுக்கும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையிலும் 121 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலபோகத்தில் 363 ஏக்கரில் விவசாயிகள் நெற்செய்கையினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.