காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க வலியுறுத்தி கோரி இன்று சென்னை காவலர் ஆணையகம் முன்பு மனித உரிமை ஆர்வலர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், கூடாங்குளம் அணுஉலை எதிர்ப்பு ; ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் மணல் அகழ்வுக்கு எதிரான போராடங்களின் அமைப்புக்களில் முன்னணில் இருந்து செயற்பட்ட சமூக ஆர்வலர் முகிலன் ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற தலைப்பில் வீடியோ படம் ஒன்றை கடந்த 15ம் திகதி வெள்ளிக்கிழமையன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னர் எழும்பூர் புகையிரதநிலையம் வந்திருந்த அவர் காணாமல் போயுள்ளார். 5 நாட்களாகியும் அவர் தொடர்பான தகவல்கள் தெரியவராத நிலையில் சென்னை உயர்நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுமீதான விசாரணை நாளை நடைபெறவுள்ள நிலையில் முகிலனை கண்டுபிடிகுமாறு வலியுறுத்தி இன்று மனித உரிமை ஆர்வலர்கள் சென்னை காவலர் ஆணையகம் முன்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது