ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பின் தலைவரான யாசின் மாலிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14ம் திகதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மேற்கொண்ட தற்கொலைத்தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து காவல்துறையினரும் துணை ராணுவமும் இணைந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்படும் பிரிவினைவாத சக்திகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன
அத்துடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கான பாதுகாப்பையும் அரசு விலக்கிக்கொண்டிருந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவரான யாசின் மாலிக்கை நேற்று இரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரது இல்லத்தில வைத்து கைது செய்த அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவுக்கு (35-ஏ) எதிரான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்னும் ஓரிரு நாளில் முக்கிய விசாரணை நடத்த உள்ள நிலையில், யாசின் மாலிக்கை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.