இலங்கைப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பாக சிவில் சட்டத்திற்கு அமைவாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றியப லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டின் சட்டமே உயரிய ஒன்றாகும். நாடாளுமன்ற சிறப்புமைக்காக நாட்டின் அடிப்படைச் சட்டத்தை தாழ்த்திப் பார்க்க முடியாது. பாராளுமன்றில் இடம்பெற்ற தாக்குதலின்போது, ஒரு கொலை நடந்திருக்குமாயின், ததனை நாடாளுமன்ற சிறப்புரிமைக்கு இணங்க விசாரணைக்கு உட்படுத்த முடியாது. அவ்வாறாயின் இந்தத் தாக்குதல்கள் குறித்தும், சிவில் சட்டத்திற்கு இணங்கவே விசாரணை செய்ய வேண்டும் எனவும், இதுவே முறையானதாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல வலியுறுத்தியுள்ளார்.