ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் பசில் ராஜபக்ஸ இடம்பெறாமை குறித்து அரசியல் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க, கூட்டணி தொடர்பில் பசில் ராஜபக்ஸ எந்தவித கால தாமதங்களையும், மேற்கொள்ளவில்லையெனவும் ஜனாதிபதிக்கும், எதிர்க் கட்சித் தலைவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் ஏன் கலந்துகொள்ளவில்லை என தன்னால் கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில், கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைபவர்களும் இருப்பதாக வும் எஸ்.பீ. திஸாநாயக்க குறிப்பிட்டார். எனினும் குறித்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்தது எனவும் இக்கூட்டணியின் குறித்த எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.