தென்னாபிரிக்காவுக்கெதிரான 2வது டெஸ்டில் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. நேற்றுதினம் போர்ட் எலிசபெத் மைதானத்தில் ஆரம்பமாகிய போட்டியில் நாயணச்சுழற்சியில் வென்ற தொன்னாபிரிக்கா முதல்லி துடுப்பெடுத்தாட தீர்மானித்ததன் அடிப்படையில் 222 ஓட்டங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்கிச் விளையாடி இலங்கை அணி 154 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் 68 ஓட்டங்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 128 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தநிலையில் இலங்கை அணியின் வெற்றிக்கு 197 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகிய நிலையில் இலங்கை அணி 45.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 197 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
முதலாவது டெஸ்ட் போட்டியை ஒரு விக்கெட்டினால் வென்ற இலங்கை அணி இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்றதனால், தென்னாபிரிக்காவை 2-0 என வைட்வோஷ் செய்து தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.