188
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொக்கைன் பயன்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து, இது தொடர்பில் விசாரணை செய்ய அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் குறித்த குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவரும் நியமிக்கப்பட்டு பின்னர் அவர் நீக்கப்பட்டுள்ளார் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தான் பிரதமரிடம் தெரிவித்தப் பின்னர், தன்னுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து குறித்த உறுப்பினரை அக்குழுவிலிருந்து நீக்கி அவருக்குப் பதிலாக மற்றுமொருவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
Spread the love