இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விஷச் சாராயத்தை அருந்தியவர்களில் குறைந்தது 99 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஊயிரிழந்தவர்கள் அனைவரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எனவும் அவர்களில் பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் விஷச் சாராயம் அருந்திய சுமார் 100 பேர் உயிரிழந்து இரு வாரங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது