அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திப்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வியட்நாம் ஹனோய் நகருக்கு புகையிரதம் மூலம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு பேரவையிவ் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தியமையினால் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் நிலைய ஏற்பட்டிருந்த நிலையில் இருநாட்டுத் தலைவர்களும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் உன் உறுதி அளித்திருந்த போதிலும் ; அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.
இதற்கு தீர்வுகாண 2-வது சந்திப்பினை நடத்தி சந்தித்து பேச இரு தலைவர்களும் முடிவு செய்துள்ள நிலையில் குறித்த சந்திப்பு இந்த மாதம் 27, மற்றும் 28 ஆகிய திகதிகளில் வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெறவுள்ள நிலையில் கிம் ஜாங் உன் புகையிரதத்தில் புறப்பட்டுள்ளார்.
அவருடன் அவரது சகோதரி கிம் யோ ஜாங், உதவியாளர் கிம் யோங் சோள் உள்பட உயர் அதிகாரிகள் செல்கின்றனர்.