இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பொகவந்தலாவ பிரிட்வெல் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 155 தனிவீடுகள் அடங்கிய ‘வீ.கே.வெள்ளையன் புரம்’ புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் இன்று (24.02.2019 ) டம்பெற்றது.
அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், கே.கே.பியதாஸ, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
மேலும் இவ்வீடுகள் ஏழு பேர்ச்சஸ் காணியில் 505 சதுரஅடி பரப்பு கொண்ட 2 அறைகள், வரவேற்பறை, குளியறை மற்றும் சமையலறை போன்ற வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் 155 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்மைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 20 மில்லியன் ரூபா செலவில் மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும் குடிநீர் வசதிகளும் இவ்வீடமைப்பு திட்டத்திற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
(க.கிஷாந்தன்)