பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் இருந்து துபாய் நோக்கிச் சென்ற விமானத்தை நேற்று மாலை நடுவானில் வைத்து கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சித்த நபரை சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவேளை 25 வயதான குறித்த நபர் காயமடைந்த பின்னர் அவர் மரணமடைந்தார் என இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் அவரை கைதுசெய்ய முயன்ற போதும் அவர் சரணடைய மறுத்ததன் காரணமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் ஒரு பங்களாதேஸ் பிரஜை எனவும் அவரிடமிருந்த கைத்துப்பாக்கியை மீட்டுள்ளதாகவும் குறித்த ; இராணுவ அதிகாரிn குறிப்பிட்டுள்ளார்.
142 பயணிகளுடன் பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் இருந்து துபாய் நோக்கிச் சென்று கொண்டிருந்த பங்காளதேஸ் அரசுக்கு சொந்தமான பிமன் பிஜி 147 எனும் போயிங் ரக விமானத்தை
142 பயணிகளுடன் பயணித்த பங்காளதேஸ் அரசுக்கு சொந்தமான பிமன் பிஜி 147 எனும் போயிங் ரக விமானத்தினை குறித்த நபர் கடத்த முற்பட்ட போது விமானம் அருகேயுள்ள சட்டோகிராம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்காவிலிருந்து துபாய் சென்ற விமானத்தை கடத்த முயற்சி
: Feb 24, 2019 @ 14:17
பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் இருந்து துபாய் நோக்கிச் சென்ற விமானத்தை இன்று மாலை நடுவானில் வைத்து கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை அடுத்து விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 142 பயணிகளுடன் பயணித்த பங்காளதேஸ் அரசுக்கு சொந்தமான பிமன் பிஜி 147 எனும் போயிங் ரக விமானமே விமானம் தரையிறங்கியுள்ளது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் கையில் துப்பாக்கியுடன் விமானியின் அறைக்குள் நுழைந்த நபர் விமானியை மிரட்டி, விமானத்தை கடத்திச் செல்ல முயன்ற நிலையில் விமானி , தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அருகேயுள்ள சட்டோகிராம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் விமானத்தைச் சுற்றிவளைத்துள்ள காவல் படையினர் விமானத்தினை கடத்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் எதற்காக அந்த விமானத்தைக் கடத்த முயன்றார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது