172
அமைச்சர்கள் மற்றும் பாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்த குழுவின் அறிக்கை இன்றை தினம் பிரதமர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் குழு கூட்டத்தின் போது அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவின் அறிக்கையே இன்றைய தினம் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
Spread the love