இந்தியாவுக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றியீட்டியுள்ளது. . இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 2 இருபதுக்கு 20 மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி நேற்று நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வென்ற அஸ்திரேலிய அணி களத்தடுபிபினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களை எடுத்திருந்தது.இதனையடுத்து 127 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.