வெனிசூலா எல்லையில் நிகழ்ந்த கலவரத்தில் 14 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். வெனிசூலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் குழப்பமும் தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில் அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக தன்னை அறிவித்துக்கொண்ட ஜூவான் குவைடோக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால், அந்த நாடுகளிடம் இருந்து உதவிகளை பெற ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மறுத்து வருகின்றார்.
மேலும் உதவி பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் வெனிசூலாவுக்குள் நுழையாத படி நாட்டின் எல்லைகளை மூடி வரும் அவர், பிரேசில் மற்றும் கொலம்பியா நாடுகளுடனான எல்லையை இரு தினங்களுக்கு முன்பு மூடியிருந்தார்.
எனினும் உணவு மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை பெறுவதற்காக எல்லையைத் தாண்டும் முயற்சியில் வெனிசூலா மக்கள் ஈடுபட்ட போது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகள் மற்pறும் ரப்பர் குண்டுத் தாக்குதல்களஜனை மேற்கொண்டனர்.
இதனால் அங்கு கலவரம் வெடித்ததனையடுத்து பாதுகாப்புபடையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 14 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 300-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர் எனவும், எல்லையோர நகரங்களில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.