பாகிஸ்தானுக்கு இந்திய விவசாயிகள் காய்கறிகளை அனுப்ப மறுத்து ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்திவிட்டதால், அங்கு காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது மேற்கொண்ட தாக்குதலில துணை ராணுவனத்தினர் 40 பேர் கொல்லப்பட்டதனையடுத்து இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தானுக்குள் செல்லும் 3 நதிகளின் நீரை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்திய விவசாயிகளும் பாகிஸ்தானுக்கு இந்திய விவசாயிகள் காய்கறிகளை அனுப்ப மறுத்து ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்தி விட்டனர். இதன் காரணமாக பாகிஸ்தானில் மரக்கறிகளின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.