167
தமிழ் திரைப்படங்களில் கமல், சரத்குமார், அர்ஜுன் ஆகியோரின் மகள்களை தொடர்ந்து, பல நடிகர்களின் மகள்கள் நடிப்பில் அறிமுகமாகவுள்ளனர்.
தமிழ் திரைப்படங்களில் நடிகர்கள் தமது வாரிசுகளை திரைப்படங்களில் அறிமுகப்படுத்துகின்ற நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. பல வாரிசு நடிகர்கள் திரைப்படங்களில் தமது பெற்றோரைப் போல கொடி கட்டிப் பறந்த நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. பலர் வாரிசு நடிகர்களாக இன்றும் திரைப்படங்களில் வலம் வருகின்றனர்.தற்போது தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகள் நிறைந்து வருகின்றனர். கமல்ஹாசனின் மகள்கள் சுருதி ஹாசன், அக்ஷரா ஹாசன், ராதா மகள்களான கார்த்திகா, துளசி, சரத்குமார் மகள் வரலட்சுமி, அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, ரவிசந்திரனின் பேத்தி தான்யா, மேனகா சுரேஷ் மகள் கீர்த்தி சுரேஷ் என இந்தப் பட்டியல் நீண்டு செல்கிறது.
தற்போது இந்த வரிசையில் இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தியும் இணைந்துள்ளனர். கல்யாணி பிரியதர்ஷன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மித்ரன் இயக்கும் படத்தில் அறிமுகமாகிறார். கீர்த்தி அருண் பாண்டியன் புதுமுகம் தர்ஷனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
Spread the love