187
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான, இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரில், நடப்புச் சம்பியனான மன்செஸ்டர் சிற்றி சம்பியன் கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
லண்டன் வெம்பிளி மைதானத்தில், நேற்று முன்தினமிரவு விலகல் முறையிலான இத்தொடரின் இறுதிப் போட்டியில், பெனால்டி முறையில் செல்சி அணியினை வென்று மன்செஸ்டர் சிற்றி சம்பியனாகியுள்ளது.
போட்டியின் மேலதிக நேரம் வரைக்கும் இரண்டு அணிகளும் கோலெதனையும் போடாதநிலையில், 4-3 என்ற ரீதியில் பெனால்டி வெற்றி பெற்று ஆறாவது தடவையாக இத்தொடரில் மன்செஸ்டர் சிற்றி அணி சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love