இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

கொட்டகலையில் முச்சக்கரவண்டி – பேருந்து நேர்க்கு நேர் மோதி விபத்து

திம்புள்ள பத்தனை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று ( 27.02.2019 ) காலை 7.30 மணியளவில் கொட்டகலையிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், அட்டனிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்ற சிறிய ரக பேருந்து ஒன்றும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மட்டும் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.