ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடவுள்ள இந்தக் கூட்டத்தில் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு இதுவரை காலமும் வழங்கி வந்த இணைஅனுசரணையிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும், அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தமை குறித்து இந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இதன்போது ஜனாதிபதி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் கட்சி ரீதியில் ஆராயப்படும் என எதிர்பாரக்கப்படுகின்றது.