அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.
இந்த இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான முதலாவது சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த இரண்டாவது சந்திப்பு வியட்நாமில் இடம்பெறுகின்றது.
இன்றும் நாளையுமாக இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையின் போது கொரிய தீபகற்பத்திலிருந்து அணுவாயுதங்களை இல்லாதொழிப்பது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமானம் மூலமும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் புகையிரதம் மூலமூம் வியட்நாமைச் சென்றடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.