தென் ஆபிரிக்காவில் எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி சிரில் ராமபோசா அறிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவில 1994ம் ஆண்டு நிறவெறிக் கொள்கை முடிவுற்ற பின்னர் ஜனநாயகப்பூர்வமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாராளுமன்ற கீழ் சபையில் பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்காக, அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி தேசிய சபை கலைக்கப்பட்டு தேர்தல் நடைமுறைகள் ஆரமப்பிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்தவகையில் மே மாதம் 8ம் திகதி பொதுத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சிரில் ராமபோசா முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதற்காக அன்றையதினத்தினை தேதியை பொது விடுமுறையாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா பதவி விலகியதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ராமபோசா பதவிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதியும் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராமபோசா, மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் பதவியை தக்க வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது