காஸ்மீரின் புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 300க்கு மேற்பட்ட தீவீரவாதிகள் கொல்லப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை பாகிஸ்தான் எல்லையை அண்மித்துள்ள தீவிரவாதிகள் முகாம் மீது 1,000 கிலோ அளவிலான குண்டுகளை மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இந்திய விமானப்படை வீசி தாக்குதல் நடத்தியிருந்தது.
இந்தத் தாக்குதலில் 300க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் முழுமையாகத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்றதாகவும், ரகசியமாக அஜித் தோவால் தலைமையில் திட்டமிடப்பட்டு, தீவிரவாத அமைப்புகள் மீது சரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்தத் தாக்குதலில் உயிர் சேதங்கள் இல்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் பதிலடி வித்தியாசமாக இருக்கும். காத்திருங்கள் என இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசீப் கபூர், இந்தியத் தாக்குதல் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது