191
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் யாழ் ஊடக அமையமும் இணைந்து நடாத்திய ”தமிழ் ஊடகத்துறை எதிர்காலமும் சவால்களும் ” முழுநாள் செயலமர்வு கடந்த 24.02.2019 அன்று யாழ் யூ.எஸ் விடுதியில் ஒன்றியத்தின் தலைவர் ஆனந் பாலகிட்னண் தலைமையில் இடம்பெற்றது.
இச் செயலமர்வில் கிழக்கு மாகாண ஊடகங்களின் நிலை குறித்து அரங்கம் பத்திரிக்கை ஆசிரியர் பூ . சீவகனும் ,ஊடகங்களின் செய்திகளின் தொடரற்ற நிலை குறித்தது காலைக் கதிர் ஆசிரியர் ந.வித்தியாதரனும் , ஊடகங்களில் தமிழ் இலக்கணம் குறித்து விரிவுரையாளர் எஸ் .இந்திரகுமாரும் விளக்கவுரை நிகழ்த்தினார்கள் .
மேலும் தமிழ் ஊடகத்துறையின் எதிர்காலமும் சவால்களும் குறித்து பத்திரிகையாளர் அ .நிக்சன் , விரிவுரையாளர், கலாநிதி எஸ் .ரகுராம், எம்.நிலாந்தன், பத்திரிகையாசிரியர் .ஆர்.பாரதி ,ஊடகவியலாளர். இ .தயாபரன். சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ராதேயன், மாணிக்கவாசகம், ஆகியோர் கருத்துக் பகிர்வுகளை மேற்கொண்டனர் .
யாழ் பல்கலைக் கழக ஊடக துறை மாணவர்கள், , ஊடகவியலாளர்கள், மூத்த ஊடகவியலாளர்கள், யாழ் .கொக்குவில், ஊடக ஆய்வு நிறுவனம் , உட்பட பலரும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love