இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து காயம் காரணமாக அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக ஆன்ட்ரூ டை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடி வருகின்ற நிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கேன் ரிச்சர்ட்சன் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ; இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து விலகிஉள்ளார்.
இதனால் இருபதுக்கு 20 தொடரை தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக நடைபெற உள்ள 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக ஐபிஎல் பிரபலமான ஆன்ட்ரூ டை அவுஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆன்ட்ரூ டை இதுவரை 26 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்களையும், 7 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 12 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 2-ம் திகதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.