காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றையதினமும் அத்துமீறி தாக்குதல் நடத்தியயதாகவும் அதனையடுத்து இந்திய ராணுவம் பதலிதாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்திய போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று தீவிரவாதிகளின் முகாமை தாக்கியமையினால் ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருவதுடன் இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா பள்ளத்தாக்கு பகுதியை அண்மித்துள்ள எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்திய படை உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது