புலவாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு உள்ள தொடர்பையும், அந்த இயக்கம் பாகிஸ்தானில் இயங்கி வருவதையும் ஆதாரத்துடன் இந்தியா பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவ படை வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இது குறித்து இந்தியா தெரிவித்துவரும் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்து வருகின்ற நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் பொறுப்பு தூதரை இந்தியா அழைத்து புலவாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு உள்ள தொடர்பையும், அந்த இயக்கம் பாகிஸ்தானில் இயங்கி வருவதையும் ஆதாரத்துடன் இந்தியா வழங்கியுள்ளது.
மேலும் பாகிஸ்தானை மையமாக கொண்டு தீவிரரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாக இந்தியா கூறி வரும் குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தொடர்ந்து மறுத்து வருவது வருத்தம் அளிக்கிறது என இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலவாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதை ஆதாரத்துடன் பாகிஸ்தானிடம் ஒப்படைத்து உள்ள நிலையில் இனியாவது அவர்கள் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.