பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு, இரண்டு நாட்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டு இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், வாகா எல்லையில் அவர் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமக்கு போரின் மீது விருப்பம் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அந்த வகையில் தனது நாட்டில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானியை விடுவிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். அதற்கமைவாக அபிநந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை தனது மிக் 21 விமானத்தில் துரத்தி சென்ற வேளை, பாகிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் படையின் தாக்குதலுக்கு இலக்கானார். அதன்பின் சிறை பிடிக்கப்பட்டார்.
எனினும் இவரை இந்தியா எப்படி மீட்கப்போகிறது என்ற கேள்வி எழுந்தது. இதற்காக இந்தியா உலக நாடுகள் இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று திடீர் திருப்பமாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசினார். அதில் அமைதியை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை விடுவிக்க போவதாக கூறினார். அதன்படி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார். வாகா பாகிஸ்தான் ராவல்பிண்டியில் தடுத்து வைக்கப்பட்ட அபிநந்தன் விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பின் அங்குள்ள இந்திய தூதரகத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து பாக். ராணுவ பாதுகாப்புடன் வாகா எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டார். லாகூரிலிருந்து அவர் கார் மூலமாக, வாகா எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இந்திய அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.