இலங்கை பிரதான செய்திகள்

இரணைதீவு மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய இரணைதீவிற்கு சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட இரணைதீவு பகுதியில் குடியேறியுள்ள மக்கள் தொடர்பாகவும், மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நேரடியாக அறித்து கொள்வதற்காக யாழ் மற்றும் கிளிநொச்சி பிராந்திய மனித உரிமைகள் ஆணைகுழுவின் ஆணையாளர் திரு.கனகராஜ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை (1) மாலை இரணை மாதா நகரில் இருந்து படகு மூலம் இரணைதீவிற்கு நேரடி பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(மெசிடோ) ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு மற்றும் ஊடகங்களின் மூலம் அறிக்கையிடப்பட்ட செய்திகளின் அடிப்படையில் இரணைதீவு மக்கள் மீள் குடியேற்றப்பட்ட பின்னர் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவும் மக்கள் ஊடக நேரடியான முறைப்பாட்டை உறுதிப் படுத்துவதற்காகவும் குறித்த குழுவானது அங்கு சென்றிருந்தது.

இதன்;; போது நேரடியாக தங்களுடைய முறைப்பாடுகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் முன்னிலையில் தெரிவித்திருந்த மக்கள் இரணைதீவு பகுதியில் குடியேறி ஒரு வருடம் ஆக போகின்ற நிலையில் இதுவரை தாங்கள் உரிய முறையில் குடி யேற்றப்படவில்லை எனவும் உரிய அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அரச திணைக்கள அதிகாரிகள் தமது தீவு பகுதிக்கு வருவது மிக குறைவும் எனவும் தம் பிரச்சினைகள் தொடர்பாக அறிந்து கொள்வது கூட இல்லை எனவும் தெரிவித்தனர்.

தங்களுக்கு கிடைக்கும் சமூர்த்தி பணம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை கூட அதிகாரிகள் தமது பகுதிகளுக்கு வழங்குவதில்லை எனவும் அவ் சிறிய தொகை பணத்தை பெறுவதற்கு கூட தாங்கள் 14 மைல் தூரம் கடலில் பயணித்து இரணைமா நகரில் பெறவேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் குடிநீர் பெறுவதற்காக தங்கள் தினமும் 5 கிலோமீற்றர் நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தங்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் மருத்துவ தேவைகளையும் உடனடியாக பெற்று தருவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை பிரதிநிதிகள் குறித்த மக்களின் வீடுகள் ,கோவில் ,பாடசலைகள் அணைத்திற்கும் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த யாழ் மற்றும் கிளிநொச்சி பிராந்திய மனித உரிமைகள் ஆணைகுழுவின் ஆணையாளர் திரு.கணகராஜ்,,,

இரணைதீவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்ககைகள் மேற்கொண்டு சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களை அழைத்து அவர்களிடம் விளக்கம் கோரவுள்ளோம். அந்த விளக்கத்தின் பின்னர் அவர்களுடைய செயற்பாடுகளை முன்னேடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள இருக்கின்றோம்.

மேலும் இவ் வருடத்திற்குள் சகல அரச திணைக்களங்களையும் ஒரு நடமாடும் சேவைக்கு அழைத்து இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை நேரடியாக ஆராய்வதற்கும் திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் இது ஒரு தீவு அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஏனைய பிரதேசத்தில் மீள் குடியேறிய மக்களுக்கு கிடைக்ககூடிய சகல உரிமைகளும் சகல வசதிகளும் இந்த மக்களை சென்றடைய வேண்டும். மீள் குடியேற்றம் தொடர்பில் எடுக்க வேண்டிய சகல நடவடிக்கை தொடர்பிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.